சுடச்சுட

    

    திருநெல்வேலி பேட்டையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பேட்டை வேம்படியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரத்தினம் மகன் செந்தில்வேல் (40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராமலட்சுமி. இத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில்வேல் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். இதை மனைவி கண்டித்தாராம். இந்நிலையில் செந்தில்வேல், வியாழக்கிழமை மதுவில் விஷம் கலந்துகுடித்தாராம். அவரை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai