சுடச்சுட

  

  ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறிப்பு:  இருவர் கைது; ஒருவர் சரண்

  By திருநெல்வேலி,  |   Published on : 08th December 2013 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி நகரம் அருகே ஆட்டோ ஓட்டுநரை கடத்திச் சென்று பணம் பறித்ததாக 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவ் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒருவர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தார்.

  முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் செல்வம் (22). இவர், தனது சுமைஆட்டோவில் பாரம் ஏற்றிக் கொண்டு திருநெல்வேலி சந்திப்புக்கு வியாழக்கிழமை இரவு வந்தாராம். பாரத்தை இறக்கிவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, திருநெல்வேலி நகரம் வழுக்கோடை சந்திப்பு அருகே சுமை ஆட்டோவும், பின்னால் வந்த கார்களும் மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால், காரில் வந்த கும்பல் ஆத்திரமடைந்து செல்வத்தை ஆட்டோவுடன் சத்திரம்புதுக்குளம் பகுதிக்கு கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு செல்வம் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை அந்தக் கும்பல் பறித்ததாம்.

  இது குறித்து திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் செல்வம் புகார் அளித்தார். அதன்பேரில் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாஸ்கர் (25), சேரன்மகாதேவியைச் சேர்ந்த வானமாமலை மகன் இசக்கிதாஸ் (25) ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவ் வழக்கு தொடர்பாக சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த கண்ணபிரான் உள்ளிட சிலரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்-1-ல் கண்ணபிரான், சனிக்கிழமை சரண் அடைந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai