சுடச்சுட

    

    இளைஞர் கொலை வழக்கு: 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

    By திருநெல்வேலி  |   Published on : 08th December 2013 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தச்சநல்லூர் இளைஞர் கொலை வழக்குத் தொடர்பாக 2 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க திருநெல்வேலி நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி வழங்கியது.

    தச்சநல்லூரைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி நகரம் நயினார்குளத்தில் சடலமாக கடந்த நவம்பர் 11-ம் தேதி மீட்கப்பட்டார்.

    இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்களில் திருநெல்வேலியைச் சேர்ந்த செüந்தர், வெங்கடேஷ் ஆகியோர் வேறொரு வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அவர்களை இந்த வழக்கு தொடர்பாக 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருநெல்வேலி நகரம் காவல் ஆய்வாளர் (பொ) விஜயகுமார், திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்-4-ல் மனு செய்தார்.

    மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் சுந்தரைய்யா, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை 2 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி சனிக்கிழமை உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai