சுடச்சுட

    

    எட்டயபுரத்தில்  11-ல் மகாகவி பாரதி பிறந்த நாள் விழா

    By எட்டயபுரம்  |   Published on : 08th December 2013 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எட்டயபுரத்தில் மகாகவி பாரதி பிறந்த நாள் விழா 11-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

    எட்டயபுரத்தில் பாரதி பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு விழா, வருகிற புதன்கிழமை மாலை 4 மணிக்கு பாரதி மணிமண்டப வளாகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தலைமை வகித்துப் பேசுகிறார். அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பாரதியின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவியருக்கு பரிசுகள் வழங்குகிறார். கோவில்பட்டி சார்-ஆட்சியர் விஜயகார்த்திகேயன், எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலை துணை இயக்குநர் சாரதிசுப்புராஜ் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.த. செல்லப்பான்டியன், ஜி.வி. மார்க்கண்டேயன், கடம்பூர் ராஜு, கிருஷ்ணசாமி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai