சுடச்சுட

  

  சுத்தமல்லி அருகே மணல் கடத்தல்: 3 பேர் கைது

  By திருநெல்வேலி,  |   Published on : 08th December 2013 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுத்தமல்லி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

  சுத்தமல்லி அருகே உள்ள சங்கன்திரடு பகுதியில், சுத்தமல்லி காவல் நிலைய சிறப்பு உதவி-ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், அருணாசலம் மற்றும் போலீஸார் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மணல் ஏற்றி வந்த டெம்போவை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தாமிரவருணி ஆற்றில் இருந்து மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பணிகரிசல்குளம் மகேஷ் (22), இந்திரா காலனி குமார் (24), வடக்கு சங்கன்திரடு மகாலிங்கம் (23) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.  டெம்போவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  மற்றொரு சம்பவம்:  இதேபோல நடுக்கல்லூர் அருகே தாமிரவருணி ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்த முயன்றதாக ஒரு டெம்போ, ஒரு லோடு ஆட்டோவை, திருநெல்வேலி கோட்டாட்சியர் சீனிவாசன் பறிமுதல் செய்து, சுத்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai