சுடச்சுட

  

  திறனை வெளிப்படுத்திய கிராமிய கலைஞர்களுக்கு பரிசளிப்பு

  By திருநெல்வேலி,  |   Published on : 08th December 2013 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டையில் நடைபெற்ற இளையோர் கலை விழாவில் திறனை வெளிப்படுத்திய கிராமிய கலைஞர்களுக்கு சனிக்கிழமை பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

  நேரு இளையோர் மையம் சார்பில் மாவட்ட இளையோர் கலை நிகழ்வுகள், பரிசளிப்பு விழா, தமிழ் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில், 14 வட்டாரங்களைச் சேர்ந்த 14 குழுவினர்கள் கலந்துகொண்டு கோலாட்டம், ஒயிலாட்டம், களியலாட்டம், சிலம்பாட்டம், தனிநபர் நடிப்பு, கிராமிய பாடல்கள், கிராமிய நடனம் போன்றவை நிகழ்த்தினர்.

  இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, மாவட்ட நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் இரா. மதிவாணன் தலைமை வகித்தார். எஸ்.எஸ். ராமசுப்பு எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்திய கிராமிய கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

  விழாவில், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய துணைத் தலைவர் தி.த. ரமேஷ்ராஜா, திருநெல்வேலி அகில இந்திய வானொலியின் மூத்த அறிவிப்பாளர் உமாகனகராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  தேசிய இளையோர் படைத் தொண்டர் வி. சரஸ்வதி வரவேற்றார். தேசிய இளைஞர் படைத் தொண்டர் சி. ஆறுமுகக்கனி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai