சுடச்சுட

  

  :திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியார் தமிழ்இசை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

  இப் பள்ளியின் கல்விச் சங்கம் சார்பில், பாரதியார் பயின்ற வகுப்பறையில் இந்த விழா நடத்தப்பட்டது. கல்விச் சங்கத்தின் செயலர் மு.செல்லையா வரவேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் சூ.அழகியசுந்தரம் தலைமை வகித்தார்.

  நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த இசைக்கவி ரமணன் பேசுகையில், பள்ளிகளில் இசைக்கல்வி என்பது மிகவும் அவசியம். மாணவர்கள் ஏதேனும் நுண்கலையை தெரிந்துகொள்ளும்போது அதனுடன் சேர்ந்து அவர்களது கல்வி மேம்படும். இசை எனும் நுண்கலையை கற்கும் மாணவர்கள் படிப்பிலும் சிறந்தவர்களாகத் திகழ்வார்கள்.

  அனைத்தையும் பள்ளிகளில் கற்றுக்கொடுப்பார்கள் என்ற மனநிலையை பெற்றோர்கள் விடுத்து, இசைக்கல்விக்கு வீட்டிலேயே அஸ்திவாரம் இட வேண்டியது அவசியம் என்றார்.

  விழாவில், பரத்வாஜ் ராமன் வீணை வாசித்தார். கல்விச் சங்கத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பி.டி.சிதம்பரம், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ச.மகாதேவன், எழுத்தாளர் வண்ணதாசன், ஆசிரியர் சொக்கலிங்கம், மாணவர்-மாணவிகள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai