சுடச்சுட

  

  நெல்லையில் ரயில் மோதி காயமடைந்த பூ வியாபாரி சாவு

  By திருநெல்வேலி,  |   Published on : 08th December 2013 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் ரயில் மோதி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பூ வியாபாரி சனிக்கிழமை இறந்தார்.

  பாளையங்கோட்டை குலவணிகர்புரம் 1-வது பாண்டி தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் பொன்ராஜ் என்ற கருணாநிதி (45). பூ வியாபாரி. இவர், கடந்த நவம்பர் 22-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் குலவணிகர்புரம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றாராம். அப்போது அவ்வழியே வந்த திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாகக் கூறப்படுகிறது.

  பலத்த காயமடைந்த அவரை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலையில் பொன்ராஜ் இறந்தார். இது குறித்து திருநெல்வேலி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  மற்றொரு சம்பவம்: பெருமாள்புரம் அருகே உள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் 4 வழிச்சாலையின் மேம்பாலத்துக்கு கீழ் பகுதியில் தலையில் காயத்துடன் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கிடப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

  ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். உயிரிழந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai