சுடச்சுட

    

    பாளை. பள்ளியில் கிறிஸ்துமஸ் குடில் போட்டி

    By திருநெல்வேலி  |   Published on : 08th December 2013 04:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் குடில் போட்டி, கிறிஸ்து பிறப்பு பெருவிழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.

    இப் பள்ளியின் மறைக்கல்வி மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் ஏ.லூர்துசாமி தலைமை வகித்தார். லூர்து எல்.ஜான் குடில்களை அர்ச்சித்தார். பள்ளித் தலைமையாசிரியர் இஞ்ஞாசி வரவேற்றார். புஷ்பம் வாழ்த்திப் பேசினார். 5 மாணவர்கள் அடங்கிய தனித்தனிக் குழு அமைக்கப்பட்டது. மொத்தம் 16 குழுவினர் குடில்களை அமைத்திருந்தனர்.  இதில், 7-ம் வகுப்பு அணி முதல் பரிசு பெற்றது. மாணவர்களே,  இறைதூதர்கள் வேடமணிந்து பங்கேற்றனர்.

    ஆட்டுக்குட்டி, புறாக்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். பிளஸ்-1 மாணவர்கள் 2-ம் பரிசையும், 8-ம் வகுப்பு மாணவர்கள் 3-ம் பரிசையும் பெற்றனர். விழாவில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai