Enable Javscript for better performance
பெண் மருத்துவரிடம் 7 பவுன் நகைப் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெண் மருத்துவரிடம் 7 பவுன் நகைப் பறிப்பு

    By திருநெல்வேலி  |   Published on : 08th December 2013 04:40 AM  |   அ+அ அ-   |    |  

    பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியில் பெண் மருத்துவரிடம் 7 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள அருணாசல நகரைச் சேர்ந்த முத்துச்சாமி மனைவி ராமலதா (40). மருத்துவரான இவர், பர்கிட் மாநகரம் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாராம்.

    நடுவககுறிச்சி நாலுமுக்கு பகுதியில் வந்தபோது, அங்கு பைக்கில் வந்த மர்மநபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, ராமலதா அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினராம். இது குறித்து ராமலதா, பாளையங்கோóட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai