சுடச்சுட

    

    பேராசிரியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

    By திருநெல்வேலி,  |   Published on : 08th December 2013 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டையில் பேராசிரியர்கள் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி,சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

    பாளையங்கோட்டையில் தூயயோவான் கல்லூரியில், பேராசிரியர்கள் இருவர் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர், அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் அ. அருள்ஞானம் தலைமை வகித்தார். அமைப்பின் செயலர் ஜி. ஆண்ரூஸ், பேராசிரியர்கள் ஜெயசுந்தர்ராஜ், எட்வர்டு மற்றும் மூட்டா அமைப்பின் மண்டலத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மண்டலச் செயலர் முருகேசன், துணைத் தலைவர் நாகராஜன், மூட்டா அமைப்பின் மாவட்டச் செயலர் சுப்பாராஜ், கிளைத் துணைத் தலைவர் ஜவாஹர்சாமுவேல் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் குடும்பத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai