சுடச்சுட

  

  பாளையங்கோட்டையில் உள்ள தென்னிந்திய திருச்சபை பேராயர் இல்லம் முன்பு, சேரன்மகாதேவி அருகேயுள்ள கரிசல் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

  சேரன்மகாதேவி அருகேயுள்ள கரிசல் கிராமத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் சேகரகுருவாக பணியாற்றி வந்த டேனியல் பால்துரை கடந்த சில நாள்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டாராம்.

  மேலும், அங்குள்ள சேகர கமிட்டி செயல்படாத நிலையில் உள்ளதாம். இதுகுறித்து சி.எஸ்.ஐ. பேராயர் ஜெ.ஜெ.கிறிஸ்துதாஸிடம் முறையிட கரிசல் பகுதி மக்கள் பாளையங்கோட்டைக்கு சனிக்கிழமை வந்தனர். அவர்களை, பேராயர் இல்லத்துக்குள் அனுமதிக்க மறுத்தனராம்.

  இதைக் கண்டித்தும், சேகர கமிட்டியை செயல்பட அனுமதிக்கக் கோரியும், பேராயர் இல்லம் முன்பு கரிசல் சேகர கமிட்டி செயலர் சுந்தர்சிங் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சேகர கமிட்டி உறுப்பினர்கள் ஆசீர்வாதம், விக்டர், அப்பாத்துரை, தேவசந்திரன், இம்மானுவேல் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai