சுடச்சுட

  

  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்ஹகக் கூட்டம்

  By திருநெல்வேலி,  |   Published on : 08th December 2013 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

  ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். அமைப்பின் மாநிலத் தலைவர் பொன். செல்வராஜ், மாநிலச் செயலர் மாதவன், அமைப்பின் மாவட்டச் செயலர் விஜயேந்திரன், மாவட்ட வட்டார வளமைய ஆசிரியர் சங்கத் தலைவர் அபிநயனசுந்தரம், முதுநிலை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்களின் மொத்த பணிக்காலத்தை கணக்கில் கொண்டு தேர்வு நிலை, சிறப்பு நிலை என வழங்க வேண்டும். அரசாணை 720 ஐ எவ்வித மாற்றமும் இன்றி அமல்படுத்த வேண்டும். மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவும், இடைநிற்றலை தவிர்க்க 14 வகையான திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியர் க. நடராஜபெருமாள் வரவேற்றார். ஆசிரியர் நயினார் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai