சுடச்சுட

  

  ரூ.4 லட்சம் நகை, பணம் திருட்டு: கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

  By வள்ளியூர்  |   Published on : 08th December 2013 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் தனியார் ஓடு தொழிற்சாலை  பணியாளர் வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம், ரூ.3 லட்சம் மதிப்புள்ள  தங்க நகைகளை திருடியதாக பொறியியல் மாணவர், அவரது தாயார், 2 பெண்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

  பணகுடி ஆசாத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் சங்கர்குமார் (40). தனியார் ஓடு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்துவருகிறார். இவர் வசிக்கும்  காம்பவுண்டில் வசிப்பவர் காளிதாஸ் மகன் பாஸ்கர் (20) என்ற தனியார் பொறியியல்  கல்லூரி மாணவர், தன் தாயார் ராமலட்சுமியுடன் (40) வசித்து வருகிறார். கூலித் தொழிலாளி ராஜலிங்கம் மனைவி பேச்சியம்மாள் (42), ராமர் மனைவி முத்து (40) ஆகியோரும் இதே காம்பவுண்டில் உள்ளனர்.

  வெள்ளிக்கிழமை இரவு சங்கர்குமார், தனது குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்றாராம். வீட்டுக்கு பூட்டு எதுவும் போடாமல் சாதாரணமாக பூட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஸ்கர், அவரது தாயார் உள்ளிட்டோர் சங்கர்குமாரின் வீட்டை திறந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணம், 9 பவுன் எடையுள்ள ரூ.3 லட்சம் தங்க நகைகளை திருடினராம்.

  இதுகுறித்து சங்கர்குமார் பணகுடி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் பாஸ்கர், அவரது தாயார் ராமலட்சுமி, பேச்சியம்மாள், முத்து ஆகியோர் நகை, பணத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்து, நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai