சுடச்சுட

  

  இந்தியர்களின் திறமை இருட்டடிப்பு செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது என கருத்தரங்கில் வேதனை தெரிவிக்கப்பட்டது.

  தேசிய சிந்தனைப் பேரவை சார்பில், பண்டைய பாரதத்தின் அறிவியலும்,  தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில், பாரதிய இதிகாச சங்கலன சமிதியின் தென் பாரத அமைப்புச் செயலர் டி.வி.ரங்கராஜன் பேசியதாவது:

  உலகின் முதல் பல்கலைக்கழகம் இந்தியாவின் தச்சசீலத்தில்தான் தொடங்கப்பட்டது. பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு கல்வி பயின்றனர். சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் பாடம் நடத்தியதாக வரலாறு கூறுகிறது. ஐரோப்பியர்கள் உடலில் ஆடைகள் இல்லாமல் வசித்த காலத்திலேயே, இந்தியர்கள் பல்கலைக்கழகம் நடத்தும் அளவுக்கு அறிவாற்றல் பெற்றிருந்தனர்.

  விஞ்ஞானம், அறிவியல் தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் இந்தியர்கள்  மிகுந்த திறமை கொண்டிருந்தனர். அந்தத் திறமைகள் அனைத்தும் வெளிநாட்டினரால் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அந்த நிலை இப்போதும் தொடர்ந்து வருகிறது. நம் நாட்டில் உள்ள கல்வி முறையை, அமெரிக்கா போன்ற நாடுகளின் கல்வி முறையைப் போல மாற்ற சிலர் எண்ணுகின்றனர். அது தவறானதாகும். கல்விமுறையில் மாற்றங்கள் என்பது அவசியம்தான். ஆனால், அது நம் நாட்டு கலாசாரத்துக்குத் தகுந்ததாக இருக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.

  இந்தக் கருத்தரங்கில் வெங்கடாசலபதி, நல்லாசிரியர் செல்லப்பா, இந்து முன்னணி நிர்வாகிகள் பாலாஜி கிருஷ்ணசாமி, குற்றாலநாதன், சந்திரசேகர், கல்லூரி மாணவர்-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai