சுடச்சுட

  

  திருநெல்வேலி அருகே தாமிரவருணி ஆற்றில் ஆசிட் கலப்பதால் குடிநீர் மாசுபடுகிறது. மேலும் ஆற்றில் குளிப்பவர்கள் தோல் நோய் பாதிக்கப்படுவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

  இது குறித்து அக் கட்சியின் மாவட்டச் செயலர் எல்.கே.எல், மீரான்மைதீன், மாவட்ட வர்த்தக அணிச் செயலர் பாட்டபத்து எம். முகம்மது அலி ஆகியோர் கூறியதாவது: மேலப்பாளையம் ரயில் நிலையம் 1981-ல் திறக்கப்பட்டது. இங்கு கழிப்பிடம், பயணிகளுக்கான தங்கும் இடம், நிலையத்தில் மேற்கூரை, தங்குமிடம் போன்ற வசதிகள் இல்லை. நடைமேடை இல்லாததால் பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகின்றனனர்.

  கடந்த 32 ஆண்டுகளாக ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம். தற்போது ரூ. 2 கோடியில் தொடங்கப்பட்டுள்ள நடைமேடை, ரயில் நிலைய மேம்பாட்டுப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலப்பாளையம் மண்டலத்தில் 1.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். திருநெல்வேலி, நாகர்கோவில் மார்க்கத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயில் காலை, மாலையில் மட்டும் நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் வர்த்தகர்கள் நலன் கருதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலப்பாளையம் அருகே குறுக்குத்துறை, கருப்பந்துறை பகுதியில் செயல்படும் சலவை நிலையங்களில் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆசிட் மற்றும் கழிவுகள் தாமிரவருணி ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசுபடுகிறது.

  ஆற்றில் குளிக்கும் பொதுமக்களுக்கு உடலில் அரிப்பு போன்ற தோல் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. குடிநீரில் ஆசிட் கலப்பதால் குடிநீரை மக்கள் பயன்படுóத்த முடியாத நிலை உள்ளது என்றார் அவர்.

  மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் இங்கு நின்று செல்ல வேண்டும். முன்பதிவு மையம் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக, எஸ்.டி.பி.ஐ, மதிமுக, சமத்துவ மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கம் சார்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

  ராமசுப்பு எம்.பி. கோரிக்கை: வாரம் ஒரு தினம் மட்டும் இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலை வாரத்தில் 2 தினங்கள் இயக்க நடவடிக்கை எடுóக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.எஸ். ராமசுப்பு எம்.பி, பொதுமேலாளர் ராகேஷ்மிஸ்ராவிடம் மனு அளித்தார். அவருடன் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் அ. அமீர்கான், இரும்பு எஃகு ஆலோசனைக்குழு உறுப்பினர் முரளிராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai