சுடச்சுட

  

  தாழையூத்து அருகே ஞாயிற்றுக்கிழமை டிராக்டர் கவிழ்ந்து விவசாயி இறந்தார்.

  தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் இந்திராகாலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன்  குமார் (47). இவருக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை  காலையில் தனது டிராக்டரில் வயலில் உழவுப் பணியில் ஈடுபட்டாராம். அப்போது சகதியில் டிராக்டர் சிக்கிக்கொண்டதால், மற்றொரு டிராக்டரை கொண்டுவந்து கயிறு கட்டி இழுக்க முயன்றாராம். கயிறு அறுந்ததில் இழுக்க வந்த டிராக்டர் கவிழ்ந்தது. டிராக்டருக்குள் சிக்கிய குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

  தாழையூத்து காவல் நிலைய ஆய்வாளர் சோனமுத்து தலைமையில் போலீஸார் விரைந்து சென்று, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் குமாரின் சடலத்தை மீட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai