சுடச்சுட

  

  திருநகர்: 277 வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க கோரிக்கை

  By dn  |   Published on : 09th December 2013 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் விடுபட்ட 277 குடியிருப்புகளுக்கும் மகிழ்ச்சி நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக, திருநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் க. ராமையா, செயலர் க. சங்கரன், பொருளாளர் எம். நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்திடம்  அளித்த கோரிக்கை மனு:÷திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 27-வது வார்டுக்கு உள்பட்ட திருநகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 312 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் புதிய குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  இதன்படி முதல்கட்டமாக 35 வீடுகளுக்கு மகிழ்ச்சி நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து கடந்த 3 மாதமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 277 வீடுகளுக்கு வேறொரு பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மகிழ்ச்சி நகர் நீர்த்தேக்கத் தொட்டியானது 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்டது. ஆனால், கனரா வங்கிக் காலனியில் உள்ள தொட்டியானது 3 லட்சம் லிட்டர் கொள்ளவு மட்டுமே. மேலும், கனரா வங்கி காலனியானது திருநகர் குடியிருப்புப் பகுதிக்கு அடுத்தபடியாக தாழ்வான பகுதியில் உள்ளது.

  இங்கிருந்து மேட்டுப்பகுதியான திருநகருக்கு சீராக குடிநீர் விநியோகிக்க முடியாது. எனவே, மகிழ்ச்சி நகர் தொட்டியிலிருந்தே விடுபட்ட 277 வீடுகளுக்கும் முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai