Enable Javscript for better performance
திருநெல்வேலி மாநகர், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி மாநகர், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பேற்பு

    By dn  |   Published on : 09th December 2013 05:09 AM  |   அ+அ அ-   |    |  

    புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் திருநெல்வேலி மாநகர், கிழக்கு மாவட்டத் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சியின் மாவட்ட கமிட்டிகளுக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை, தில்லி தலைமை அலுவலகம் வெளியிட்டது. அதன்படி திருநெல்வேலி மாநகர் மாவட்டத் தலைவராக பேட்டை ராம்நாத், கிழக்கு மாவட்டத் தலைவராக தமிழ்செல்வன், மேற்கு மாவட்டத் தலைவராக ஐயாதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் ராம்நாத், தமிழ்ச்செல்வன் ஆகியோர் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அங்கிருந்த காமராஜர், இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு, முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட கவுன்சிலர் குமரேஷ், தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அமீர்கான், சங்கரபாண்டியன், திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர் நவமணி பாண்டியன், ஜேம்ஸ்போர்டு, மகளிரணி நிர்வாகி கோமதி, சோமு, பாறை கிருஷ்ணன், ரமேஷ்செல்வன், சுயம்புலிங்கதுரை, திருமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    kattana sevai