Enable Javscript for better performance
பழுதான சாலையை சீரமைக்க மதிமுக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பழுதான சாலையை சீரமைக்க மதிமுக வலியுறுத்தல்

    By dn  |   Published on : 09th December 2013 05:23 AM  |   அ+அ அ-   |    |  

    தச்சநல்லூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தச்சநல்லூர் பகுதி நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாநகர் மாவட்டச் செயலர் எஸ். பெருமாள் தலைமையில் நடைபெற்றது. அவைத் தலைவர் எஸ்.என். சுப்பையா முன்னிலை வகித்தார். தச்சநல்லூர் பகுதிச் செயலர் பொன். வெங்கடேஷ் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் ஆறுமுகபாண்டியன், இலக்கிய அணித் தலைவர் ம.ச. சுதர்சன், மாவட்ட இளைஞரணிச்செயலர் அருள்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மதிமுக நிர்வாகிகள் பூங்கொடிசாமிநாதன், எஸ். ரத்னராஜ் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி 1,2,3,4, 52,53,54 மற்றும் 55 வது வார்டுகளில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். பழுதான சாலையை சீரமைக்க வேண்டும். மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். வேம்பன்குளம்-சங்கரன்கோவில், சிதம்பரம்நகர்-வேம்பன்குளம்-சங்கரன்கோவில் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். தச்சநல்லூர் பகுதியில் பாளையங்கோட்டை செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

    தச்சநல்லூர் புறவழிச்சாலையில் இருந்து தாழையூத்து வரை செல்லும் சாலையை இருபுறமும் விரிவுபடுத்த வேண்டும். தச்சநல்லூர் வார்டுக்கு  உள்பட்ட ஸ்ரீபுரம் சந்திப்பில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai