சுடச்சுட

  

  திருநெல்வேலியில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிகழ்ச்சியில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  திருநெல்வேலி நகரம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆளுநர் வருகை தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் வி.பி.ஆர். வெங்கடாசலம் தலைமை வகித்தார். ரோட்டரி ஆளுநர் ஜெ. ஜேசையாவில்லவராயர் கலந்து கொண்டு, 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். ரோட்டரி சங்க சேவை மலர் வெளியிடப்பட்டது. சாமுவேல்ரவீந்திரன் புதிய உறுப்பினராக சேர்ந்தார். நிகழ்ச்சியில் காவல்துறையில் சிறப்பாக பணி செய்தவர்களை பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க துணை ஆளுநர் டாக்டர் பிரேமசந்திரன், மாவட்டச் செயலர் பி.கே. சரவணன், ரோட்டரி சங்கச் செயலர் எஸ். சிவசுப்பிரமணியன், பொருளாளர் நடராஜன்பழனி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai