சுடச்சுட

    

    மேலப்பாளையத்தில் 1500 பேருக்கு நிலவேம்பு குடிநீர் அளிப்பு

    By dn  |   Published on : 09th December 2013 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலப்பாளையத்தில் நடைபெற்ற முகாமில் பயனாளிகள் 1500 பேருக்கு நிலவேம்பு குடிநீர் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

    மழையால் மாறி வரும் சூழ்நிலை காரணமாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மேலப்பாளையத்தில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி, உலக தமிழ் மருத்துவக் கழகம் சார்பில் நடைபெற்ற முகாமில் 1500 க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிலவேம்பு குடிநீர் பயன்குறித்து டாக்டர் மைக்கேல்ஜெயராஜ் பேசினாôர். முகாமினை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஐ. உஸ்மான்கான் தொடங்கி வைத்தார். திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பிஸ்மிகாஜா, மாவட்ட பொதுச்செயலர் எம். அன்வர்முகைதீன், செயலர் முகம்மதுலெப்பை, தொகுதித் தலைவர் ஷேக்தாவூத், பொருளாளர் பஷீர், தொகுதிச் செயலர் ஆதம், நகரத் தலைவர் அப்துல்காதர், துணைத் தலைவர் கல்வத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai