சுடச்சுட

    

    வணிக ரீதியிலான நாட்டுக்கோழி வளர்ப்பு: தொடர் வானொலி வேளாண் நிகழ்ச்சி தொடக்கம்

    By dn  |   Published on : 09th December 2013 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வணிக ரீதியிலான நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து ஒரு மாத தொடர் வானொலி வேளாண் நிகழ்ச்சி தொடங்கியது.

    இதுதொடர்பாக திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

    திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்துடன் இணைந்து வணிக ரீதியிலான நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு மாதகால தொடர் வானொலி வேளாண் நிகழ்ச்சியினை விவசாயிகள் நலனுக்காக டிசம்பர் மாதம் ஒவ்வொரு புதன்கிழமையும் உழவர் உலகம் நிகழ்ச்சியில் இரவு 7.25 மணிக்கு வழங்க உள்ளது.

    தமிழ்நாட்டில் நாட்டுக்கோழி வளர்ப்பு-இன்றைய நிலையும் எதிர்காலமும் என்ற தலைப்பில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் சே.பிரதாபன் பேசினார்.

    இம்மாதம் 11-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அறிவியல் ரீதியான நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள் என்ற தலைப்பில் பயிற்றுவிக்கும் கால்நடைப் பண்ணை வளாகத்தின் தலைவர் வெ.தனசீலன் பேசுகிறார். 18-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் நாட்டுக்கோழிகளுக்கான தீவன மேலாண்மை உத்திகள் என்ற தலைப்பில் கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் சு.கி.எட்வின் பேசுகிறார்.  இம்மாதம் 25-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் நாட்டுக்கோழிகளைத் தாக்கும் நோய்களும் நோய்த்தடுப்பு முறைகளும் என்ற தலைப்பில் கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறை இணைப்பேராசிரியர் மு.முருகன் பேசுகிறார் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai