சுடச்சுட

    

    பாளையங்கோட்டை அருகே திருடச் சென்ற வழக்குரைஞர் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மங்கம்மாள் சாலையைச் சேர்ந்தவர் கமலேஷ் (45). வழக்குரைஞரான இவர் லண்டனில் வசித்து வருகிறார். கே.டி.சி. நகரில் இவருக்கு சொந்தமான பங்களா உறவினர்கள் பராமரிப்பில் உள்ளது.

    பூட்டியிருந்த பங்களாவில் பின்புறம் இருந்த கிரீல் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார்  பங்களாவை திறந்து பார்வையிட்டனர். வீட்டில் விலை உயர்ந்த பொருள்கள் இருந்தன.

    நகைகள், ரொக்கப்பணம் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதாக  போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai