சுடச்சுட

    

    ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

    By dn  |   Published on : 10th December 2013 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிடர்களுக்குச் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இணையதளம் (ஆன்-லைன்) மூலம் 2-ம் கட்டமாக விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிட மக்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இணையதளம் மூலம் 2-ம் கட்டமாக விண்ணப்பங்கள் கடந்த 6-ம் தேதி முதல் இம் மாதம் 22-ம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.

    மகளிர் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. பொருளாதார கடன் திட்டங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 30 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழு பொருளாதார கடன் திட்டங்களுக்கு திட்டத் தொகையில் 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்.

    மகளிர் சுயஉதவிக் குழு சுழல்நிதி திட்டத்தில் ரூ. 25 ஆயிரம் மானியமாகவும், மாவட்ட ஆட்சியர் விருப்புரிமைத் திட்டம் மற்றும் மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் மானியமாகவும், இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பட்டயகணக்கர், செலவு கணக்கர் தேர்வு எழுதி ஊக்குவிக்கும் வகையாக ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.இந்த மானியங்களைப் பெற, இந்து ஆதி திராவிடர்களாகவும், 18  முதல் 55 வயதிற்கு உள்ட்டவராகவும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். மகளிர் குழுக்களுக்கு வயது வரம்பு 18 முதல் 60 ஆகவும், இளைஞர் சுயவேலைவாய்ப்புத் திட்டத்திற்கு வயது வரம்பு 18 முதல் 35 ஆகவும், பட்டயகணக்கர் தேர்வு எழுதுவோர்  25 முதல் 45 வயதிற்கு உள்பட்டும் இருக்க வேண்டும். இதேபோல ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒவ்வொரு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பெட்டிக்கடை மற்றும் மளிகை கடை வைத்தல், வாகனங்களில் சென்று துணி வியாபாரம் செய்தல், வாடகை பாத்திர கடைகள் வைத்தல், சைக்கிள் கடை, கை-தள்ளுவண்டி மூலம் காய்கனிகள் விற்பனை செய்தல், வாடகை நாற்காலி கடை நடத்துதல், மைக்செட், கரிமூட்டம் அமைத்தல், தென்னை மற்றும் பனை ஓலை முடைதல் போன்ற திட்டங்களுக்கு விண்ணப்பிக்க இயலாது.

    தகுதி வாய்ந்தவர்கள் ட்ற்ற்ல்:ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்.ற்ஹட்க்ஸ்ரீர்.ஸ்ரீர்ம் என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, வாகன கடன்களுக்கு ஓட்டுநர் உரிமத்துடன் பாட்ஜ் பெற்றிருக்க வேண்டும். புகைப்படம், பட்டா, சிட்டா (நிலம் சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு) டின் எண்ணுடன் ஆன விலைப்புள்ளி திட்ட அறிக்கை, கல்விச்சான்றிதழ் ஆகியவற்றின் பதிவுகளை அதற்கான இடங்களில் அவசியம் பதிவு செய்வதோடு, புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மனுதாரர்கள் இணையதளம் மூலம் 24 மணி நேரமும் விண்ணப்பிக்கலாம். பாளையங்கோட்டை, இலந்தகுளம், போலீஸ் ரிசர்வ் லைன் ரோட்டில் உள்ள தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்திலும் அலுவலக நேரத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai