சுடச்சுட

  

  திருநெல்வேலி நகரில் கோயில், காட்சி மண்டபம், பள்ளிக்கூடம் அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

  மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் இம்தியாஸ்மீரான் மற்றும் நிர்வாகிகள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளித்த மனு: திருநெல்வேலி நகரில் சேரன்மகாதேவி சாலையில் திருக்கல்யாண காட்சி மண்டபம், கம்பாநதி காமாட்சி அம்மன் கோயில் அருகில் 2 டாஸ்மாக் மதுப்பானக் கடைகள் இயங்கி வருகிறது.  இப்பகுதியில் லிட்டில் பிளவர் மார்டன் பள்ளி, லிட்டில் ஏஞ்சல் பள்ளி மற்றும் ஜூம்ஆ பள்ளிவாசல் உள்ளது. மதுக்கடைகள் உள்ள பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து தினமும் பள்ளி, மாணவர்கள் வெளியூருக்கு கல்வி பயில செல்கின்றனர்.  மதுக்கடைகளால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே இங்குள்ள 2 மதுக்கடைகளை வேறு பகுதிக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai