சுடச்சுட

  

  சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவெம்பாவைத் திருவிழா தொடக்கம்

  By dn  |   Published on : 10th December 2013 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவெம்பாவைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா 10 நாள்கள் நடைபெறும்.

  திருவெம்பாவைத் திருவிழா கொடியேற்றத்தையொட்டி திங்கள்கிழமை அதிகாலை கொடிபட்டம் வீதி உலா கொண்டுவரப்பட்டு, சங்கரலிங்க சுவாமி சன்னிதி முன் உள்ள கொடி மரத்தில் காலை 6.25 மணிக்கு கொடியேற்றப்பட்டது.

  தொடர்ந்து கொடிமர பீடத்திற்கு பால்,தயிர்,மா பொடி, மஞ்சப்பொடி,தேன், உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அங்கு ஏற்கெனவே ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த 9 கலசங்களில் உள்ள கும்ப நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. கொடிமரம் தர்ப்பைப் புல் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பின்னர் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி நடராஜருக்கு தினமும் தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 4-ம் திருநாளான டிச.12-ல் 63 நாயன்மார்கள் குடைவரை காட்சியும், 5-ம் திருநாளான 13-ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். 7-ம் திருநாளான 15-ம் தேதி சுவாமி சிவப்பு, வெள்ளை சாத்தியும் 16-ம் தேதி பச்சை சாத்தியும் காட்சியளிக்கிறார். 10-ம் திருநாளான டிச.18 -ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

  கொடியேற்ற நிகழ்ச்சியில் கோமதிஅம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் மா.பட்டமுத்து, சைவசித்தாந்த சபைச் செயலர் ஆவுடையப்பன், ஓய்வுபெற்ற ஆசிரியர் அரசு, சப்-இன்ஸ்பெக்டர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai