சுடச்சுட

    

    சுந்தரனார் பல்கலை. தொலைநெறி தொடர்கல்வி தேர்வு: 16-ல் தொடக்கம்

    By dn  |   Published on : 10th December 2013 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொலைநெறி தொடர் கல்வி இயக்ககத்தின் தேர்வுகள் இம் மாதம் 16-ம் தேதி தொடங்குகின்றன.

    இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் கூடுதல் தேர்வாணையர் அர. மருதக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    இப் பல்கலைக்கழகத்தின் தொலைநெறித் தொடர்கல்வி இயக்கக நவம்பர் 2013 தேர்வுகள், இம் மாதம் 16 முதல் 31 வரை நடைபெறுகின்றன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தேர்வு நடைபெறும் மையங்கள்: திருநெல்வேலி - தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி, கீழப்புலியூர்- இந்து மேல்நிலைப் பள்ளி, வாசுதேவநல்லூர் - நாடார் உறவின்முறை காமராஜர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, கோவில்பட்டி - விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளி, தெற்குகள்ளிக்குளம் - தெட்சணமாற நாடார் சங்கக் கல்லூரி, தூத்துக்குடி - செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சாத்தான்குளம் - மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகர்கோவில் - ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, மார்த்தாண்டம் - நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி.

    அனுமதிச் சீட்டு, தேர்வு அட்டவணை, மையத்தின் பெயர் ஆகியவை அனைத்தும் மாணவர்-மாணவிகளுக்கு அவர்களது வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    அனுமதிச் சீட்டு கிடைக்கப் பெறாதோர் தொலைநெறித் தொடர்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை அனுமதி அட்டையை தேர்வு மையக் கண்காணிப்பாளரிடம் தேர்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக காண்பித்து தேர்வெழுதலாம். மேலும் விவரங்களுக்கு 0462-2338521 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai