சுடச்சுட

  

  ஏ.ஐ.டி.யூ.சி. பீடித் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் பேட்டையில் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு, ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலத் தலைவர் கே.சுப்பராயன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலர் எஸ்.காசிவிஸ்வநாதன் அறிக்கை சமர்ப்பித்தார். சிவகிரி, புளியங்குடி, சங்கரன்கோவில், முக்கூடல், வள்ளியூர், திருநெல்வேலி, பேட்டை, விக்கிரமசிங்கபுரம் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  அகில இந்திய பீடி சுருட்டு புகையிலை தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 11-வது அகில இந்திய மாநாட்டை நெல்லையில் ஜனவரி 25, 26, 27-ம் தேதிகளில் சிறப்பாக நடத்துவது. திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநில தொழிலாளர்கள் பங்கேற்க ஏதுவாக ஏற்பாடுகளைச் செய்வது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

  இதன்பின்பு நடைபெற்ற பீடித்தொழிலாளர்கள் பேரவைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.சுப்பராமன், மாநில கட்டட சங்கத் தலைவர் என்.பெரியசாமி, மாவட்டத் தலைவர் ஆறுமுகம், காசிவிஸ்வநாதன் ஆகியோர் பேசினர். பேட்டை பீடித் தொழிலாளர் சங்கச் செயலர் எம்.இப்ராஹிம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai