சுடச்சுட

  

  மேலக்கருங்குளம் அருகே தகராறு: இளைஞரை தாக்கிய இருவர் கைது

  By dn  |   Published on : 10th December 2013 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேலப்பாளையம் அருகே உள்ள மேலக்கருங்குளம் பகுதியில் இளைஞரை தாக்கியதாக இருவரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

  முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23). ஆட்டோ ஓட்டுநர். இவர் தனது ஆட்டோவில் மேலக்கருங்குளம் பகுதியில் திங்கள்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ் வழியாக கீழமுன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஐயப்பன் (24), மகாராஜன் (25) ஆகியோர் பைக்கில் வந்தனராம். ஆட்டோவும், பைக்கும் மோதுவது போல அருகருகே சென்றதால் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதாம்.

  இதில், இருவரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த மணிகண்டனை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து ஐயப்பன், மகாராஜன் இருவரையும் கைது செய்தனர். இச் சம்பவத்தால் தருவை, முன்னீர்பள்ளம், கருங்குளம் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai