சுடச்சுட

  

  வள்ளியூர் சாமியார் பொத்தை ஸ்ரீ முத்துகிருஷ்ணசுவாமியின் 100-வது குருபூஜை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை (டிச.12) காலை 6 மணிக்கு கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது.

  குருபூஜைவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினந்தோறும் வனவிநாயகர் கோயிலில் சிறப்பு பூஜையும், ஸ்ரீ முத்துகிருஷ்ணசுவாமி ஸ்ரீ மஹாமேரு தியான மண்டபத்தில் விளக்கு பூஜையும், அன்னதானமும் நடைபெற்று வருகின்றன.  தினமும் பல்வேறு தமிழ்பண்பாட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

  ஞாயிற்றுக்கிழமை "நிருத்ய பிரவாஹா' என்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மலையடிவாரத்தில் குழந்தைகள் நலம் மற்றும் பொதுமருத்துவ முகாம் நடைபெற்றன. இரவு குருவே சரணம் என்ற தலைப்பிலான ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

  தேரோட்டம்: குருபூஜையையொட்டி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு சூட்டுபொத்தையைச்சுற்றி கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai