சுடச்சுட

  

  ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலை வெளியிட கோரிக்கை

  Published on : 11th December 2013 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பணிசெய்யும் ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலை ஜனவரியில் வெளியிட வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

  அமைப்பின் மாவட்டச் செயலர் இ. சுடலைமணி, தலைவர் பி. ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கை:

  ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பணி செய்யும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல் ஒவ்வோர்  ஆண்டும் ஜனவரி முதல் தேதியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும்.

  தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணி செய்யும் இடைநிலை ஆசிரியர்களுக்கு  தனியாகவும், தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஆகியோருக்கு தனித்தனியாகவும் இப்பட்டியல் வெளியிடப்பட்டு அதன்படி பதவி உயர்வு அளிக்கப்படும்.

  ஒன்றிய அளவில் ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். பட்டியல் முன்னுரிமை தொடர்பாக வரப்பெறும் ஆட்சேபனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் இருந்து அனுப்பிவைக்கப்படும் முன்னுரிமைப் பட்டியலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் ஆய்வு செய்து, மேல்முறையீடு வரப்பெற்றால் அதனைப் பெற்று பரிசீலனை செய்து, குறைகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் ஏப்ரல் மாதம் வரை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடவில்லை. இதனால் ஆசிரியர்கள் தங்களின் முன்னுரிமையையும், பட்டியலில் தவறுகள் இருக்கின்றனவா எனவும் அறியமுடியவில்லை.

  பட்டியலில் காணப்படும் தவறுகளால் கலந்தாய்வில் குழப்பம் ஏற்படும். களக்காடு,  வள்ளியூர் ஒன்றியங்களில் இதுபோன்ற காரணங்களால் ஆசிரியர்களின் பதவி உயர்வு  நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலை ஜனவரி முதல் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai