சுடச்சுட

  

  ஆதார் அட்டை எண் கேட்டு ஆசிரியர்கள் நெருக்கடி தருவதால் மாணவர்கள் அவதிப்படுவதாக மதிமுக புகார் கூறியுள்ளது.

  இதுதொடர்பாக, அக் கட்சியின் சங்கர்நகர் பேரூர் கிளைச் செயலர் எம். முருகன் விடுத்துள்ள அறிக்கை:

  சங்கர்நகர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களில் பெரும்பகுதியினர் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காமல் உள்ளனர். பலர் வெளியூர்களில் பணிபுரிவதால் குடும்பத் தலைவர்களே புகைப்படம் எடுக்காமல் உள்ளனர். ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவினாலும் அந்த அட்டையைப் பயன்படுத்துவதற்கான பணிகளை அரசு நிர்வாகம் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடம் கணக்கெடுப்பு என்ற பெயரில் ஆதார் அட்டை எண் கேட்கின்றனர். மாணவர் பலரும் புகைப்படம் எடுக்கவில்லை. இதனால், எங்கு சென்று புகைப்படம் எடுப்பது என்பதே தெரியாமல் ஒவ்வொரு அரசு அலுவலகமாக அலையும் சூழல் உள்ளது. ஆதார் அட்டை கட்டாயமா, இல்லையா என்பது இப்போது பிரச்னையில்லை.  அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியில் அனைவரையும் ஈடுபடுத்தும் வகையில் சங்கர்நகர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக புகைப்படம் எடுக்கும் பணியைத் தொடங்க வேண்டும்.

  விடுபட்டவர்கள் மட்டுமல்லாது, இதுவரை புகைப்படம் எடுக்காதவர்களும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். புகைப்படம் எடுக்க தேவையற்ற நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai