சுடச்சுட

  

  காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

  Published on : 11th December 2013 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  , டிச. 10: காலியாக உள்ள 1200 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன  உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு கிராம சுகாதார செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட கிளை சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலப் பொருளாளர் என். மரியசெல்வம் தலைமை வகித்தார்.  மாநிலப் பொதுச்செயலர் அ. பாப்பா ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். மாவட்டத் தலைவர் எஸ். பர்வதம் முன்னிலை வகித்தார். மூடப்பட்ட 6 பயிற்சி மையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும்; துணை சுகாதார நிலையங்களில் ஸ்டாஃப் நர்சுகளை பணி அமர்த்தக் கூடாது; கிராம சுகாதார  செவிலியர்களுக்கான பதவி உயர்வை வட்டார, மாவட்ட அளவில் வழங்க வேண்டும்;  பகுதி சுகாதார செவிலியர்களின் தரஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  மாவட்டச் செயலர்கள் எஸ். ஆனி ஜூலியட், எஸ். விஜயகுமாரி, பொருளாளர் பி. ஜெயந்தி, துணைத் தலைவர்கள் எம். டெய்சிராணி, ஐ. லதா மங்கையர்கரசி உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai