சுடச்சுட

  

  கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

  Published on : 11th December 2013 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது.

  கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், முதலாவது உலையில் கடந்த அக். 23-ஆம் தேதி மின் உற்பத்தி தொடங்கியது. முதல் நாளில் அதிகபட்சமாக 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து மத்தியத் தொகுப்பில் இணைக்கப்பட்டது. பின்னர், ஆய்வுக்காகவும் மின் உற்பத்தியை அதிகரிக்கவும் ஜெனரேட்டர் அடிக்கடி நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.

  210 மெகாவாட், 230 மெகாவாட் என சிறிது சிறிதாக மின் உற்பத்தி அளவு அதிகரிக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த நவ. 29-ஆம் தேதி 400 மெகாவாட்டாக அதிகரித்தது. இந்நிலையில், பராமரிப்புப் பணிக்காக மின் உற்பத்தி கடந்த 2-ம் தேதி நிறுத்தப்பட்டது.

  இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச.10) மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது. இரவு நிலவரப்படி 280 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாவதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai