சுடச்சுட

  

  திருநெல்வேலி வண்ணார்பேட்டையில், 10 சதவிகித அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  இந்த ஆர்ப்பாட்டம், வாயிற்கூட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ். வின்சென்ட் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எம். தங்கத்துரை, எம். சண்முகம், பி. அருண் முன்னிலை வகித்தனர். மாவட்ட சிஐடியூ செயலர் ஆர். மோகன் தொடங்கிவைத்தார்.

  போக்குவரத்துத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்; 01.09.2013 முதல் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்; விலைவாசி உயர்வைக் கருத்தில்கொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்; 10 சதவிகித அகவிலைப் படி நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  சம்மேளன துணைச் செயலர் ஆர். வாசுதேவன், சம்மேளனப் பொதுச்செயலர் ஜி. வேல்சாமி, மாவட்ட சிஐடியூ தலைவர் எம். ராஜாங்கம், பொருளாளர் எம். சுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்டச் செயலர் வை. பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி மண்டல பொதுச்செயலர் எஸ். பெருமாள், நிர்வாகிகள் பி. முத்துக்கிருஷ்ணன், கே. ஜோதி, டி. காமராஜ், டி. ஹரிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai