Enable Javscript for better performance
தச்சநல்லூர் பெண் எஸ்.ஐ. மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தச்சநல்லூர் பெண் எஸ்.ஐ. மீது வழக்கு

    By dn  |   Published on : 11th December 2013 04:04 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி, டிச. 10: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவின்பேரில், தச்சநல்லூர் பெண் உதவி ஆய்வாளர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த தடிவீரன் மகன் ரங்கசாமி (52). இவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு அளித்தார். அதில், ஒருவழக்கு தொடர்பாக தச்சநல்லூர் பெண் உதவி ஆய்வாளர் சாவித்திரி தன்னை, அவதூறாகப் பேசி தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், பெண் உதவி ஆய்வாளர் மீது தச்சநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    kattana sevai