சுடச்சுட

  

  மார்கழி மாத சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை தரிசிக்க நவ  கைலாய திருக்கோயில்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி  மண்டலக் கிளை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  இதுதொடர்பாக, மண்டலப் பொதுமேலாளர் கே. முருகன் கூறியது:

  மார்கழி மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள  நவகைலாய திருக்கோயில்களுக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும் வகையில் சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்படும். அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலக் கிளையின் சார்பில் வரும் 22, 29 ஆகிய தேதிகளிலும், ஜனவரி 5, 12 ஆகிய தேதிகளிலும் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

  நபர் ஒருவருக்கு பயணக் கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படும். பேருந்து நான்கு நாள்களும் காலை 7 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்துநிலையத்திலிருந்து புறப்படும்.

  பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், ஸ்ரீவைகுண்டம்,  தென்திருப்பேரை, மணத்தி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய இடங்களில் உள்ள நவ கைலாய கோயில்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் திருநெல்வேலி வந்து சேரும். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் மற்றும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இந்த சிறப்புப் பேருந்துக்கு முன்பதிவு நடைபெறுகிறது. அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை முன்பதிவு செய்யப்படும் என்றார் அவர்.

  --------------------

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai