சுடச்சுட

  

  , டிச.10: திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  இக்கூட்டத்துக்கு மேயர் விஜிலாசத்யானந்த் தலைமை வகித்தார். துணை மேயர் பூ. ஜெகநாதன் முன்னிலை வகித்தார். ஆணையர் த. மோகன், தச்சை மண்டலத் தலைவர் கே. மாதவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  மேலப்பாளையத்தில் புதுமனைத் தெரு பள்ளிவாசல், முகைதீன் தர்காவுக்கு சொந்தமான நிலம், அங்கு பொதுமக்கள் உபயோகத்தில் உள்ள கிணறு ஆகியவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என காயிதே மில்லத் தெரு, வெள்ளை கலிபா சாகிப் தெரு, அகமது பிள்ளைத் தெரு பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

  இடியும் அபாயத்தில் குடிநீர் தொட்டி: மாநகராட்சி 11- வது வார்டில் திருவண்ணநாதரம் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி இடியும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி புதிதாக குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாமன்ற உறுப்பினர் ஜெ. வசந்தா (திமுக) மேயரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

  மாசு கலந்த குடிநீர்: மாநகராட்சி 46-வது வார்டில் வேம்படி அம்மன் கோயில் தெரு பகுதி மக்களுக்கு 3 மாதமாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை. மேலும் குடிநீர் கலங்கலாக மாசு கலந்து காணப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சர்க்கரை விநாயகர் கோயில் தெரு, கீழ பஜார், துர்க்கை அம்மன் கோயில் மேல தெரு, வி.வி.கே. தெரு, ஏ.வி.கே. தெருக்களில் பழுதான பொது குடிநீர் இணைப்புகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாமன்ற உறுப்பினர் பி. அழகுராஜ் (பாஜக) கோரிக்கை மனு அளித்தார்.

  சமக கோரிக்கை: மாநகராட்சி 28-வது வார்டு தொம்மை மிக்கேல்புரத்தில் குடிநீர் விநியோகம் சீராக கிடைக்கவில்லை. மேலும் அப்பகுதியில் தெருக்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமக மேலப்பாளையம் பகுதி செயலர் பி. அந்தோனி கோரிக்கை மனு அளித்தார். மேயரிடம் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai