சுடச்சுட

  

  மாநில விளையாட்டுப் போட்டிகள்: நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

  Published on : 11th December 2013 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும்  தகுதியுடைய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வித் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயகண்ணு கூறியது:

  நிகழ் கல்வியாண்டில் மண்டல தடகளப் போட்டியில் வெற்றி பெற்று முதல் இரு இடங்களைப் பிடித்த மாணவர்கள் மாநிலப் போட்டியில் பங்கேற்கலாம்.

  குடியரசு தின தடகளப் போட்டிகள் கோயம்புத்தூரில் ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பாரதியார் தின குழுப் போட்டிகள் ஈரோட்டில் ஜனவரி 9-ல் தொடங்கி 11 வரை நடைபெறுகிறது. குடியரசு தின குழுப் போட்டிகள் மதுரையில் ஜனவரி 28-ல் தொடங்கி 30 வரை நடைபெறுகிறது. விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சேலம் ஆகிய பகுதிகளில் வரும் 27-ஆம் தேதி முதல் ஜனவரி 24 வரை பல்வேறு போட்டிகளும் நடைபெறுகின்றன. தகுதியானோர் திருநெல்வேலி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரமேஷ் ராஜாவை தொடர்பு கொள்ளலாம் என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai