சுடச்சுட

  

  மீன்வளத் துறையில் களப் பணி மேற்பார்வையாளர் பதவியிடத்துக்கு  தாற்காலிக அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

  இந்தப் பணியிடத்துக்கு தகுதியானோர் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார். மீன்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்வள நிலவளத் திட்டத்தில், களப் பணி  மேற்பார்வையாளராக வெளிச்சந்தையிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் ஆள்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

  இளநிலை மீன்வளப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. மீன்வளம், விலங்கியல், கடல் வாழ்  தாவர உயிரினங்கள் தொடர்பான பட்டப் படிப்பு மற்றும் மீன்வளத் துறை பட்டயப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 30.9.2014 வரை பணிபுரியலாம். தொகுப்பூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

  தகுதியானோர் தங்களது சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மீன் வளத் துறை உதவி இயக்குநர், எண்.1 லட்சுமி நரசிம்மபுரம் தெரு, பாளையங்கோட்டை பேருந்துநிலையம் எதிரில், திருநெல்வேலி-2, தொலைபேசி: 0462- 2581488.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai