சுடச்சுட

    

    திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டத்தில் டிச. 27, 28-ஆம் தேதிகளில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த மாவட்ட, மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.எஸ். ஜார்ஜ் கோசல் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சு. சுப்பிரமணியன், எம்.ஏ.எம். ஷெரீப், என். சேர்மச்செல்வன், எம்.பி.எம். அன்பழகன் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட திமுக செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன், மாநகர் மாவட்டச் செயலர் மு. அப்துல்வஹாப் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநகர் மாவட்ட இளைஞரணிச் செயலர் எஸ்.வி. சுரேஷ், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருகைதரும் ஸ்டாலினுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம், பொதுக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

    திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் தீர்க்கும் வகையில், மாநகரில் சுற்றுவட்டச் சாலை (ரிங்ரோடு) திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கந்தசாமி தீர்மானங்களை வாசித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai