சுடச்சுட

  

  அதிமுக-வின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு நெல்லை, தென்காசி முன்னோடி

  By dn  |   Published on : 12th December 2013 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கு திருநெல்வேலி, தென்காசி தொகுதிகள் முன்னோடியாக இருக்கும் என அதிமுக மாவட்டச் செயலர் எஸ்.முத்துக்கருப்பன் பேசினார்.

  திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:

  நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை உள்ளதாக பாஜக-வினர் கூறுகின்றனர். ஆனால், தமிழகத்தைப் பொருத்தமட்டில் எப்போதும் அதிமுக-வும், ஜெயலலிதாவும் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக இருப்பர். தமிழகத்தில் மோடி அலை எதுவுமில்லை. காங்கிரஸ் கட்சியும், திமுக-வும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைவது நிச்சயம்.

  தோல்வி பயம் காரணமாகவே திருநெல்வேலி, தென்காசி தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திமுக முடிவு செய்திருக்கிறது. எனவேதான் திமுக-வின் மாவட்ட நிர்வாகிகள் திருநெல்வேலி, தென்காசி ஆகியவற்றில் திமுக போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

  அதிமுக-வை பொருத்தமட்டிலும் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவது உறுதி. இந்த வெற்றிக்கு முன்னோடியாகவும், அதிக வாக்குகள் வித்தியாசம் என்ற நிலையில் திருநெல்வேலி, தென்காசி தொகுதிகள் முன்னிலை வகிக்கும்.

  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் வரும் 19ஆம் தேதி முதல் கட்டணம் செலுத்தலாம் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டியது கட்சியினர் அனைவரது கடமை என்றார்.

  இக் கூட்டத்துக்கு, அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், துணைச் செயலர் வி.பி. மூர்த்தி, பொருளாளர் கணேஷ் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலர் ஹரிஹர சிவசங்கர் வரவேற்றார். மேயர் விஜிலா சத்யானந்த், துணை மேயர் ஜெகநாதன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் சுதா பரமசிவன் உள்ளிட்ட பலர் பேசினர். வரும் 14ஆம் தேதி (சனிக்கிழமை) பாளையங்கோட்டை நேருஜி கலை அரங்கில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயல்வீரர்ககள் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது எனவும், இக்கூட்டத்தில் பங்கேற்கும் பாசறை மாநிலச் செயலரான திருச்சி எம்பி குமார், அமைச்சர் செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட கட்சியின் தலைமை நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

   

  ஸ்டாலினுக்கு எதிராக போட்டிக் கூட்டம்

  திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலர் எஸ். முத்துக்கருப்பன் பேசியது: கடையநல்லூரில் வரும் 28-ம் தேதி மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை விஞ்சும் வகையில் அதிமுக சார்பில் திருநெல்வேலியில் கூட்டம் நடத்தப்படும். திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்ட கட்சித் தலைமையிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் தேதி கிடைத்தவுன் அந்தக் கூட்டத்தை பிரமாண்டமாகவும், ஸ்டாலின் கூட்டத்துக்கான போட்டிக் கூட்டமாகவும் நிச்சயம் நடத்தப்படும். அதற்கு முன்பாக வரும் 28ஆம் தேதி மகளிரணி சார்பி்ல் கூட்டம் நடைபெறும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai