சுடச்சுட

  

  திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  சேரன்மகாதேவி மேல வடக்குத்தெருவைச் சேர்ந்த சுப்பையா மனைவி உலகம்மாள் (65). இவர் தனது ஆடுகளை, பொழிக்கரை உச்சிமாகாளி அம்மன் கோவில் அருகே புதன்கிழமை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு கண்காணித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவ் வழியாக பைக்கில் வந்த மர்மநபர்கள் உலகம்மாள் அணிந்திருந்த 15 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai