சுடச்சுட

  

  திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கிளை தொடக்க விழா நடைபெற்றது.

  சுத்தமல்லியில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்கள் கூட்டம் திருநெல்வேலி பேரவைத்  தொகுதித் தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் முகம்மதுலெப்பை உள்பட பலர் பங்கேற்றனர்.

  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக காசிம், துணைத் தலைவராக புகாரி, செயலராக செய்யதுஅலி, துணைச் செயலராக காசிம்பாய், பொருளாளராக ஜலால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

  சுத்தமல்லியில் உள்ள வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தமல்லியில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் மதுக்கடையை அகற்ற வேண்டும். சுத்தமல்லி பகுதியில் தாமிரவருணி நதியில் இருந்து மணல் கடத்துவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பாளை பேரவைத் தொகுதி பொருளாளர் பஷீர் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai