சுடச்சுட

    

    :சுத்தமல்லி அருகே மணல் கடத்தி வந்ததாக மினி லாரியை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் போலீஸார் கல்லூர் பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ் வழியாக வந்த மினிலாரியை மடக்கினர். அதில் இருந்த 2 பேர் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனராம். பின்னர் லாரியை சோதித்தபோது அதில், தாமிரவருணி ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன், லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கொண்டாநகரம் செய்யதலி, திருப்பணிகரிசல்குளம் மகாராஜன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    45 மது பாட்டில்கள் பறிமுதல்:திருநெல்வேலி பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் இரவு நேரத்திலும் மது விற்பனை நடைபெறுவதாக பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிகுமார் தலைமையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு மது விற்றுக் கொண்டிருந்த சிரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பாலு (34) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 45 மதுப்பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai