Enable Javscript for better performance
தவ்ஹீத் ஜமாத் சார்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தவ்ஹீத் ஜமாத் சார்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

    By dn  |   Published on : 12th December 2013 03:56 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி பேட்டையில் தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பில் நலிந்த குடும்பங்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தவ்ஹீத் ஜமாத் பேட்டைக் கிளை, மஸ்ஜிதுர் ரஹீம் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் பக்ரீத் பண்டிகையில் குர்பானி கொடுத்த ஆடு, மாடுகளின் தோல்கள் மூலம் கிடைக்க பெற்ற நிதி ரூ. 79,000 மூலம் நலிந்த குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு தவஹீத் ஜமாத் அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலர் மைதீன்பாரி தலைமை வகி்த்தார். கிளைத் தலைவர் ஷேக்அப்துல்காதர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 10 நலிந்த குடும்பங்களுக்கு தையல் இயந்திரம், இருவருக்கு மருத்துவ உதவிகள் ஆகியன வழங்கப்பட்டது.

    மாவட்டச் செயலர் மாவட்டத் தலைவர் செய்யதுஅலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai