சுடச்சுட

    

    திருநெல்வேலி, டிச. 11:திருநெல்வேலியில் ஓடும் பஸ்ஸில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணி புதன்கிழமை இறந்தார்.

    பாளையங்கோட்டை அருகே உள்ள பாலாமடை வடக்குத்தெருவைச் சேர்ந்த சுடலை மகன் சுப்பையா (54). இவர், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். பாவூர்சத்திரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு புதன்கிழமை  பஸ்ஸில் சுப்பையா வந்து கொண்டிருந்தாராம். புதிய பஸ் நிலையம் வந்தபோது சுப்பையா மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு, அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனராம். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனராம். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai