சுடச்சுட

    

    நெல்லை மாநகராட்சி எஸ்சி, எஸ்டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    By dn  |   Published on : 12th December 2013 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநகராட்சி பொறியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருநெல்வேலி மாநகராட்சி எஸ்டி, எஸ்டி ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏ. பட்டன் தலைமை வகித்தார். எம். சீனிவாசன் முன்னிலை வகித்தார். எஸ். சுந்தரம் வரவேற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் பூ. கோபாலன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.

    மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். எஸ்சி, எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வன்கொடுமைச் சட்டப்படி நிவாரணத் தொகை வழங்க வேண்டும். கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். மாநகராட்சியில் பணிபுரியும் எஸ்சி, எஸ்டி ஊழியர்கலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மத்திய மாநில அரசு எஸ்சி, எஸ்டி ஊழியர் சங்க பொருளாளர் பொன்னுசாமி, கு. அரிராம்,  மாநகராட்சி ஊழியர் பால்பாண்டி உள்ளிட்ட பலர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai