சுடச்சுட

  

  நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் தூய்மைப்படுத்தும் பணி தொடக்கம்

  By dn  |   Published on : 12th December 2013 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

  திருநெல்வேலி மாவட்ட நீதி்மன்ற வளாகத்தில் முதன்மை அமர்வு நீதிமன்றம், தலைமைக் குற்றவியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களும், வழக்குரைஞர்கள் அறை, ஆவணக் காப்பக அறை என பல்வேறு பிரிவுகளுக்கான கட்டடங்கள் உள்ளன.

  இந்த நீதிமன்ற வளாகத்தில் ஆங்காங்கே செடிகள் வளர்ந்தும், குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றை அகற்றி தூய்மைப்படுத்துவதற்காக மாநகராட்சி உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 நாள்களுக்கு பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளன. புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற விழாவில் தூய்மைப் படுத்தும் பணியை மாவட்ட முதன்மை நீதிபதி எம். நசீர் அகமது தொடக்கி வைத்தார். மாநகர மேயர் விஜிலா சத்யானந்த், துணை மேயர் ஜெகநாதன், ஆணையர் மோகன் ஆகியோர் மேற்பார்வையில் பணிகள் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக நீதிமன்ற வளாகத்தில் கொசுவை ஒழிப்பதற்கும், குடிநீர் வசதி செய்துதரவும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

  இந்த விழாவில், 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி தனபால், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன், நீதிபதிகள் தமிழரசி, ஜெயசிங்க, ராமலிங்கம், கஜீரா செல்வம், மனோஜ்குமார், சுந்தரய்யா, செல்வபாண்டியன் மற்றும் வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பணியில் மாநகராட்சியின் துப்புரவு பிரிவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai